இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸி.

மூன்றாவது சர்வதேச T20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

by Staff Writer 15-02-2022 | 7:18 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது சர்வதேச T20 கிரிக்​கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது. கன்பராவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 16.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. Glenn Maxwell 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் Aaron Finch 35 ஓட்டங்களையும் பெற்றனர். மஹீஸ் தீக்ஸன 3 விக்கெட்களை கைப்பற்றினார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக கேன் ரிச்சர்ட்சன் தெரிவானார். இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச T20 தொடரை இரண்டு போட்டிகள் எஞ்சிய நிலையில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.