வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் சிக்கி 7 பேர் பலி

பிரான்ஸில் வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் சிக்கி 7 பேர் பலி

by Staff Writer 15-02-2022 | 9:45 AM
Colombo (News 1st) பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 02 சிறுவர்களும் அடங்குவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் வீதியின் இரு மருங்கிலுமுள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த பாரிய வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனைய செய்திகள்