by Staff Writer 14-02-2022 | 2:52 PM
Colombo (News 1st) நுவரெலியா - லிந்துலை நகரிலுள்ள உணவகமொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உணவகத்தில் சமையல் செய்துகொண்டிருந்த போது அவரது ஆடையில் தீ பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.