12 இந்திய மீனவர்கள் இரணைதீவு கடற்பரப்பில் கைது

12 இந்திய மீனவர்கள் இரணைதீவு கடற்பரப்பில் கைது

by Staff Writer 13-02-2022 | 2:46 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 2 ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுகளுடன், சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.