போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

by Staff Writer 13-02-2022 | 4:10 PM
Colombo (News 1st) யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மல்லாகம் - கோணப்புலம் பகுதியில் வைத்து நேற்றிரவு (12) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 265 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.