by Staff Writer 13-02-2022 | 11:23 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நெற்புதிர் விழா இன்று (13) நடைபெற்றது.
உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன்முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படுகின்றது.
தைப்பூச நாளில் புதிர் எடுத்தல் நடைமுறையில் உள்ள போதிலும் பெரும்போக வயல் அறுவடையைத் தொடர்ந்து வரும் நாட்களில் புதிர் எடுத்தலே மட்டக்களப்பு
கொக்கட்டிச்சோலையில் வழமையாக இருக்கின்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் முதலில் சுவாமிக்கு அளந்து வழங்கப்பட்டு, பின்னர் வரிசை முறைப்படி குருமார்கள், ஆலயத்தினுள் சிறப்பு பணி செய்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என புது நெல் வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் புதுஅமுது, பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.