நெல் சந்தைப்படுத்தல் சபையால் 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபையால் 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபையால் 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2022 | 2:38 pm

Colombo (News 1st) இதுவரை 31,600 மெட்ரிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 90 ரூபாவுக்கும் சம்பா அரிசி நெல் 92 ரூபாவுக்கும் கீரி சம்பா நெல் 95 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல்லை வழங்குவதாயின், நாட்டரிசி நெல் 92 ரூபாவுக்கும் சம்பா அரிசி நெல் 94 ரூபாவுக்கும் கீரிசம்பா நெல் 97 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுவதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்