கப்பல் துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கப்பல் துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கப்பல் துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2022 | 3:10 pm

Colombo (News 1st) திருகோணமலை – கப்பல் துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் – சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றிரவு (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை – கப்பல் துறை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்