இரண்டு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம், சுகாதாரத்துறை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

by Staff Writer 12-02-2022 | 3:44 PM
Colombo (News 1st) மின்சார விநியோகம் மற்றும் சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுதி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சார விநியோகம் வைத்தியசாலை, மருந்தகங்கள் மற்றும் இதனுடன் இணைந்த நோயாளர் பராமரிப்பு சேவைகள், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுக்கும் நோக்கில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.