எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டறிக்கை

பொருளாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டறிக்கை

by Staff Writer 12-02-2022 | 3:03 PM
Colombo (News 1st) நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டறிக்கையொன்றை வௌியிட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது, நாடு எதிர்கொண்டுள்ள நான்கு பொருளாதார சவால்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன, 01. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சர்வதேச முறிகளை விநியோகிப்பதனூடாக சர்வதேச சந்தையில் இலங்கைக்கு கடன் பெறுவதற்குள்ள சந்தர்ப்பம் இல்லாமற்போகும் 02. தற்போது இலங்கையில் காணப்படும் வௌிநாட்டு கையிருப்பு ஒரு மாதத்திற்கான இறக்குமதிக்கும் போதாமல் இருப்பது 03. 2020 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் வருமானத்தில் 70 வீதம் கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டியேற்பட்டமை வரலாற்றில் அதிகூடிய வட்டி வீதமாக பதிவானமை 04. கடந்த 2 வருடங்களில் மொத்த அரச கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 வீதத்திற்கும் 125 வீதத்திற்கும் இடைப்பட்ட தொகைக்கு அதிகரித்துள்ளமை இவை நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார சவால் எனவும் இந்த சவாலை வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் இந்த கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்