by Staff Writer 12-02-2022 | 6:39 PM
Colombo (News 1st) தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.
நிலவும் வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் பற்றாக்குறையினால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த 2 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அன்ரூ நவமணி சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் இன்மையினால் மத்துமக உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளும் நேற்றிரவு முதல் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.