தமிழக திரையரங்குகள் 100%இருக்கைகளுடன் இயங்க அனுமதி

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

by Bella Dalima 12-02-2022 | 7:55 PM
தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100% இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்தது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் திரையரங்குகள் 50 % இருக்கைகளுடன் மாத்திரம் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளுடன் செயற்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.