விகாரையில் இருந்த தொல்பொருட்கள் திருட்டு

கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் இருந்த தொல்பொருட்கள் திருட்டு

by Staff Writer 12-02-2022 | 5:39 PM
Colombo (News 1st) ரம்புக்கனை - கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பளிங்கினாலான தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளன. நேற்றிரவு இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 1956 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் மற்றும் பளிங்கினால் ஆன தொல்பொருட்களே திருடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.