உயர்தர பரீட்சைக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

by Staff Writer 12-02-2022 | 4:24 PM
Colombo (News 1st) இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளுக்கான கால அட்டவணையை கருத்திற்கொண்டு புதிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்தார். அனைத்து பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கும் இந்த வழிகாட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. பரீட்சை நாளில் வழங்கப்பட வேண்டிய வினாத்தாள்கள், அவற்றின் பகுதிகள், அதற்காக வழங்கப்பட வேண்டிய காலம் உள்ளிட்டவை அதில் அடங்குகின்றன. அத்துடன் பரீட்சை குறித்து மாணவர்களுக்கும் பொறுப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வினாத்தாளுக்கு 3 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டிருப்பின், அந்த காலத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, வைத்தியசாலையுடன் இணைந்த பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்கள், அன்டிஜன் அல்லது PCR பரிசோதனை பெற்று 7 நாட்களின் பின்னர் வீடுகளுக்குச் சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.