பாணந்துறை கடற்கரையில் வீசப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் விசாரணை

பாணந்துறை கடற்கரையில் வீசப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் விசாரணை

பாணந்துறை கடற்கரையில் வீசப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2022 | 3:55 pm

Colombo (News 1st) பாணந்துறை பிரதான தபால் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படவிருந்த சுமார் 99 கடிதங்கள் பாணந்துறை, பிங்வத்த கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தபால் திணைக்களத்தின் விசாரணை பிரிவும் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டது.

பிங்வத்த கடற்கரையில் கடிதங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் தபால் அலுவலக அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யததாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

தபால் ஊழியர் ஒருவராலேயே கடிதங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாகம் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த கடிதங்களை பொலிஸாரே விநியோகித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்