8 நாட்களில் 25,000 சுற்றுலா பயணிகள் வருகை

8 நாட்களில் 25,000 வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

by Bella Dalima 11-02-2022 | 4:42 PM
Colombo (News 1st) இம்மாதத்தின் முதல் 8 நாட்களில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 25,000 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள இந்த காலப்பகுதியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளமை பாரிய முன்னேற்றம் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார். இந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏனையோர் இந்தியா, உக்ரைன், ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்கா விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.