புத்திஜீவிகளை சமூகமயப்படுத்துவதே அரசின் நோக்கம்

புத்திஜீவிகளை கல்வியினூடாக சமூகமயப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 11-02-2022 | 5:36 PM
Colombo (News 1st) எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளை கல்வியினூடாக சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். வவுனியா பல்கலைக்கழகத்தை உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் கையளித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். நாடொன்று பலமடைய வேண்டுமாயின், நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும் எனவும், அதுவே பயனுள்ள முதலீடு எனவும் ஜனாதிபதி கூறினார். அதற்கமைய, தேசிய கல்வியை கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அதற்கமைய, நாட்டின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.