இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் மிலிந்த மொறகொட

by Staff Writer 11-02-2022 | 7:29 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட, இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டெல்லியில் இன்று சந்தித்தார். அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, எதிர்வரும் நாட்களில் புது டெல்லிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த தீர்மானமிக்க நாட்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தனிப்பட்ட ரீதியிலும் ஆர்வம் கொண்டிருப்பது தொடர்பில் இந்திய நிதி அமைச்சருக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்.