சில்லறை கடை உரிமையாளரை கடத்தி கப்பம் கோர முயன்ற இருவர் கைது

சில்லறை கடை உரிமையாளரை கடத்தி கப்பம் கோர முயன்ற இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2022 | 6:51 pm

Colombo (News 1st) கண்டி – தெல்தோட்டையில் சில்லறை கடை உரிமையாளரை கடத்தி கப்பம் கோர முயன்ற 33 மற்றும் 26 வயதான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்தோட்டையிலுள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தெல்தோட்டை – வி-சந்திரமலை பகுதியில் உள்ள சில்லறை கடை ஒன்றின் உரிமையாளர் நேற்று முந்தினம் இரவு , லொறி ஒன்றில் சென்றவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

54 வயதான குறித்த வர்த்தகரை 3 இலட்சம் ரூபா கப்பம் கோரி சந்தேகநபர்கள் கடத்தியுள்ளனர்.

லொறியை கலஹா பகுதியில் இரவு நேர சோதனைச்சாவடியில் நிறுத்தாமல் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பெல்வுட் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி நிறுத்தப்பட்டபோது, அதிலிருந்து தப்பிய வர்த்தகர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்