குமாரபுரம் படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல்

by Staff Writer 11-02-2022 | 7:50 PM
Colombo (News 1st) திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குமாரபுரம் சித்திவிநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நினைவுத்தூபியில் தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. குமாரபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், சம்பவத்தில் 39 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்றதுடன், சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.