ஜப்பான் இளவரசிக்கு கொரோனா

ஜப்பான் இளவரசிக்கு கொரோனா

by Bella Dalima 10-02-2022 | 3:54 PM
Colombo (News 1st) ஜப்பான் நாட்டின் இளவரசி யோகோவிற்கு Yoko கொரோனா நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால், தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 38 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த Yoko-விற்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஜப்பான் அரச குடும்பத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் நபர் இளவரசி Yoko என்பது குறிப்பிடத்தக்கது.