நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்: வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் தகவல்

நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்: வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் தகவல்

நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்: வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் தகவல்

எழுத்தாளர் Bella Dalima

10 Feb, 2022 | 4:28 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் ஒமிக்ரோன் கொரோனா வகையை எதிர்த்து போராடுவதற்கு நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் என வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் Anthony Fauci இன்று தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபரின் அடிப்படை மருத்துவ நிலையை பொறுத்தும் அவரது வயதை பொறுத்தும் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் புதன்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், “மீண்டும் ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். குறிப்பாக, mRNA தடுப்பூசியை செலுத்திக்கொள்வோருக்கு நான்காவது டோஸ் தேவைப்படலாம். அவரது வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து அது செலுத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு நவம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் உள்ள அரை மில்லியன் மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர், இது கொரோனா வைரஸ் நெருக்கடியின் முதிர்ச்சியான கட்டம்” என்றும் Fauci முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஒமிக்ரோனை ‘கவலையளிக்கும் மாறுபாடு’ என்று பட்டியலிட்டதிலிருந்து சுமார் 1,00,000 இறப்புகள் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்