ரிஷாட் பதியுதீன் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ரிஷாட் பதியுதீன் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 09-02-2022 | 4:59 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இரண்டு மாதங்களுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று அனுமதி வழங்கியுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டுப் பயணத்தடை, குறித்த காலப்பகுதியில் தற்காலிகமாக நீக்கப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார். அத்துடன், நீதிமன்ற பொறுப்பிலுள்ள வௌிநாட்டு கடவுச்சீட்டினையும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமது வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.