Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் முதலீடு செய்துள்ள அதானி வர்த்தக குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி Bloomberg தரப்படுத்தலில் ஆசியாவின் கோடீஸ்வரர் பட்டியிலில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரிடமுள்ள மொத்த சொத்துக்களின் பெறுமதி 88.5 பில்லியன் டொலர்களாகும்.
கௌதம் அதானியின் வர்த்தக குழுமத்தில் துறைமுகம், சுரங்கம், பசுமை எரிசக்தி போன்ற வர்த்தகங்களும் அடங்குகின்றன.
இதற்கு முன்னர் கோடீஸ்வரர் பட்டியலில் ஆசியாவில் முகேஷ் அம்பானி முன்னிலை வகித்திருந்தார்.
இந்நிலையில், முகேஷ் அம்பானியை முதல் முறையாக முந்தியுள்ளார் கௌதம் அதானி.
முதலிடத்தில் நீடித்து வந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டொலராகும்.
சமீப காலமாக அம்பானியை விட, அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.