பயங்கரவாதத்தை முறியடிக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்த ஜப்பான்

பயங்கரவாதத்தை முறியடிக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்த ஜப்பான்

பயங்கரவாதத்தை முறியடிக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்த ஜப்பான்

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2022 | 5:43 pm

Colombo (News 1st) போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக ஜப்பானிடமிருந்து வாகனங்களும் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் இரண்டாம் கட்ட அன்பளிப்பாக இவை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து, ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவற்றை இன்று முற்பகல் வழங்கிவைத்துள்ளார்.

28 Land Cruiser ரக வாகனங்களும் Prado ரக வாகனமொன்றும் போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களை கண்டறிவதற்கான Scanner இயந்திரங்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சுமார் 700 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களே வழங்கிவைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் C.T.விக்ரமரத்னவும் அரச பகுப்பாய்வாளர் கௌரி ரமணாவும் வாகனங்களை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்