by Staff Writer 07-02-2022 | 2:44 PM
Colombo (News 1st) பனாமுர - முல்எடியாவல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான எம்பிலிப்பிட்டிய - முல்எடியாவல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 27 வயதான கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
சந்தேகநபரின் வீட்டிலிருந்த நாயொன்று கொலை செய்யப்பட்டவரின் பிள்ளையை கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட தகராறின் போது கொலை செய்யப்பட்ட நபர் சந்தேகநபரின் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்பின்னர் சந்தேகநபரால் கோடரி மற்றும் கத்தி போன்றவற்றால் தாக்கி தமது சகோதரனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த பெண் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.