by Staff Writer 06-02-2022 | 6:24 PM
Colombo (News 1st) தற்போது நிலவும் சீமெந்துக்கான தட்டுப்பாடு எதிர்வரும் இரு வாரங்களில் நிவர்த்திக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
சீமெந்து உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியே சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய சீமெந்து தொழிற்சாலையொன்று திறக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் சீமெந்துக்கான தட்டுப்பாடு நீங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், சீமெந்தின் விலையில் மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு நிறுவனமும் இதுவரை தமக்கு அறிவிக்கல்லையென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் குறிப்பிட்டார்.