குடும்பங்கள் இடையிலான மோதல் கொலையில் முடிந்தது

by Staff Writer 06-02-2022 | 8:31 PM
Colombo (News 1st) தலவாக்கலை - மடக்கும்புர வடக்கிமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை வடக்கிமலை தோட்டத்திலுள்ள இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது தாக்குதலுக்குள்ளான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பணக் கொடுக்கல் - வாங்கலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்தவர் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை, மடக்கும்புர வடக்கிமலை தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.