முன்னேஸ்வரம் ஶ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

முன்னேஸ்வரம் ஶ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

முன்னேஸ்வரம் ஶ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2022 | 4:21 pm

Colombo (News 1st) சிலாபம் – முன்னேஸ்வரம் ஶ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலயத்தின் மகா கும்பாபிசேக பெருவிழா இன்று (06) நடைபெற்றது.

ஶ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஆலய தலைமை குருக்கள் தலைமையில் நடைபெற்றன

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் நேற்று (05) சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை எண்ணெய்காப்பு பூஜைகள் நடைபெற்றன.

மங்கள இசை முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் பிரதான கும்பங்கள் எடுத்து வரப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மூல மூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தசமங்கள தரிசனமும் நடைபெற்றது.

மேலும், நாளை (07) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 12 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்