தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாவிட்டால் அனுமதி இல்லை!

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 05-02-2022 | 4:15 PM
Colombo (News 1st) முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, போதுமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்தல் வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவிய போது, பொது இடங்களுக்கு பிரவேசித்தல், முழுமையாக தடுப்பூசி ஏற்றல், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வயதெல்லை மற்றும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடுவதற்கான வரையறைகள் தொடர்பில் விரைவில் பரிந்துரைகள் வௌியிடப்படுமென அவர் தெரிவித்தார்.