எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் உயிரிழப்பு

by Staff Writer 05-02-2022 | 5:06 PM
Colombo (News 1st) வெல்லவாய - எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். மாத்தறையிலிருந்து அங்கு சென்ற சிலரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். மாத்தறை - பம்புரன பிரதேசத்தை சேர்ந்த 6 பேர் இன்று காலை எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நுவரெலியாவிற்கு சென்று கொண்டிருந்த போதே அங்கு குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். 51 மற்றும் 65 வயதான இருவரின் சடலங்களே இன்று பகல் மீட்கப்பட்டது. 56 வயதானவரின் சடலம் இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.