by Staff Writer 05-02-2022 | 5:38 PM
Colombo (News 1st) கடந்த இரண்டு நாட்களில் சுமார் 50 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெற்கொள்வனவு சபையினால் ஒரு கிலோகிராம் நெல் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் நெற்கொள்வனவு இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் முறைமை தொடர்பான யோசனை, அமைச்சரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
நட்டஈட்டை வழங்குவதற்காக 40,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டிற்கமைவாக, பெரும்போகத்தில் நாடளாவிய ரீதியில் 30 வீத செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.