பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் இராஜினாமா

அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் இராஜினாமா

by Staff Writer 05-02-2022 | 5:57 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லாங்கர் (Justin Langer) இராஜினாமா செய்துள்ளார். அவரது ஒப்பந்தத்தை குறுகிய தவணைக்கு நீடிப்பதாக வழங்கப்பட்ட சலுகையை நிராகரித்து, தனது பதவியை அவர் இராஜினாமா செய்துள்ளார். ஜஸ்டின் லாங்கரின் முகாமைத்துவ நிறுவனத்தினால் இன்று காலை இந்த அறிவிப்பு வௌியாகியது. குறித்த அறிவிப்பிற்கு முன்னதாக நடைபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தைகள் தீர்வுகளின்றி நிறைவிற்கு வந்திருந்தன.