மொரட்டு​வை பல்கலைக்கழகத்திற்கு குவைத் கடன் உதவி

மொரட்டு​வை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு குவைத் கடன் உதவி

by Staff Writer 05-02-2022 | 3:34 PM
Colombo (News 1st) மொரட்டு​வை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் 1600 மில்லியன் ரூபா குவைத் அரசாங்கத்தினால் கடன் உதவியாக வழங்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் இந்த நிதியை வழங்கவுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையை அண்டியதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய செய்திகள்