Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு வீழ்ச்சி

Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சி

by Bella Dalima 04-02-2022 | 5:16 PM
Colombo (News 1st) பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. பேஸ்புக்கின் வழமையான பயனர்களின் பாவனை கடந்த 18 வருடங்களில் முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது. Meta நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி Mark Zuckerberg இன் நிகர சொத்து மதிப்பு 31 பில்லியன் டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக Bloomberg செல்வந்தர்களுக்கான குறிக்காட்டி தெரிவித்துள்ளது.