by Staff Writer 04-02-2022 | 7:50 PM
Colombo (News 1st) இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) தமது உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதன்போது, யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் சுடர் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து செல்வபுரம் வரை பேரணியாகச் சென்று அங்கும் கவனயீர்ப்பில் ஈடுப்பட்னர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பேரணியாக முனீஸ்வரன் வீதியூடாக முனியப்பர் ஆலய முன்றலை சென்றடைந்தது.
பின்னர் முனியப்பர் ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.