by Staff Writer 04-02-2022 | 7:40 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார்.
அதற்கமைய, நாளை மறுதினம் (06) இந்தியாவில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் வௌிவிவகார அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவை மேலும் விரிவுபடுத்துதல் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தொற்று நிலைக்கு மத்தியில் இரு நாடுகளிடையேயும் தொழிலுக்காக ஊழியர்களை வரவழைத்தல், கல்வி நடவடிக்கைகளுக்காக புலமைப்பரிசில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.