by Staff Writer 04-02-2022 | 4:11 PM
இங்கிலாந்தின் Derbyshire அணியுடன் சுரங்க லக்மால் ஒப்பந்தம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால், இங்கிலாந்தின் Derbyshire பிராந்திய அணிக்காக விளையாட இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சுரங்க லக்மால், இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெறவுள்ளார்.
இதன்பின்னர், அவர் இங்கிலாந்தின் Derbyshire பிராந்திய அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளார்.
Derbyshire பிராந்திய அணியின் தலைமை அதிகாரியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் செயற்பட்டு வருகின்றார்.
சுரங்க லக்மால் தமது அணியில் இணைந்துகொண்டமை தொடர்பில் மிக்கி ஆத்தர் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.