சுதந்திர தினத்தில் நெலும்வில மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய மக்கள் சக்தி

சுதந்திர தினத்தில் நெலும்வில மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய மக்கள் சக்தி

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2022 | 4:04 pm

Colombo (News 1st) அநுராதபுரம் – மகாவிலச்சிய, நெலும்வில கிராமத்திற்காக மக்கள் சக்தியினால் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் திட்டம் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் சக்தியினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் அங்குரார்ப்பணம் தொடர்பான மகிழ்ச்சியுடன் நெலும்வில கிராம மக்கள் இம்முறை சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இத்திட்டத்தின் மூலம் நெலும்வில மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் சந்தர்ப்பம் மக்கள் சக்திக்கு கிடைத்தது.

அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கலாசார நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கியதாக இந்த சுதந்திர தின நிகழ்வு அமையப்பெற்றமை விசேட அம்சமாகும்.​

நெலும்வில மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக டெனிசன் மற்றும் வினிதா ரொட்ரிகோவின் நிதியுதவியுடன் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை நிர்மாணிக்கும் பணி கடந்த வருடம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நீண்டகாலமாக குடிநீரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருந்த நெலும்வில மக்களுக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளாகியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்