ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவல் 

ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவல் 

by Bella Dalima 03-02-2022 | 5:50 PM
Colombo (News 1st) ஹங்வெல்ல - தும்கொலஹேனவில் உள்ள தின்னர் (Thinner) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (03) பிற்பகல் தீ பரவியது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்ததாக கோட்டை மாநாகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.