வௌிநாட்டு படகில் ஹெரோயின் கடத்தல்: 9 ஈரானியர்கள் கைது

by Bella Dalima 03-02-2022 | 3:55 PM
Colombo (News 1st) சர்வதேச கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாகக் கூறப்படும் ஈரான் பிரஜைகளுடன் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. படகில் இருந்த ஈரான் பிரஜைகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட படகிலிருந்த சுமார் 200 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் கடலில் கொட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்யும் போது, அவர்களிடமிருந்து 250 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.