by Bella Dalima 03-02-2022 | 4:52 PM
Colombo (News 1st) வவுனியா மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 100 குளங்களை புனரமைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குளங்களை தூர்வாரி, நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குளங்களை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக நீரை விநியோகிப்பதும் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.