by Staff Writer 03-02-2022 | 2:21 PM
Colombo (News 1st) தமது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீடத்தின் சில மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தாம் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக அருந்திக்க பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைப்பணி பொருள் உற்பத்தி இராஜாங்க அமைச்சராக அருந்திக்க பெர்னாண்டோ செயற்பட்டார்.
இராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்திய போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் , ராகம பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.
தாக்குதலை மேற்கொள்வதற்கு காரில் சென்ற 06 பேரும் காரின் சாரதியும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.