by Bella Dalima 03-02-2022 | 4:01 PM
Colombo (News 1st) புத்தளம் - பெரியபாடு கடலில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடலில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை இன்று (03) காலை மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போன, பாலாவி பகுதியை சேர்ந்த 33 வயதான மீனவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.