2030-இல் நாட்டின் 70% மின் உற்பத்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமே இடம்பெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 02-02-2022 | 8:51 PM
Colombo (News 1st) 2030 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மூலம் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று மன்னாரில் தெரிவித்தார். தேசிய மின் கட்டமைப்பிற்கு 50 மெகாவாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை இன்று பார்வையிட்ட போதே ஜனாதிபதி இதனை கூறினார். புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான இடங்களை தெரிவு செய்யுமாறும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.