கைக்குண்டு கண்டுபிடிப்பு: பொரளை தேவாலய ஊழியர்கள் விடுவிப்பு

கைக்குண்டு கண்டுபிடிப்பு: பொரளை தேவாலய ஊழியர்கள் விடுவிப்பு

கைக்குண்டு கண்டுபிடிப்பு: பொரளை தேவாலய ஊழியர்கள் விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2022 | 5:12 pm

Colombo (News 1st) பொரளையிலுள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தினுள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் ஊழியர் ஒருவரையும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் ஏனைய இரண்டு ஊழியர்களையும் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர்கள் குண்டு மீட்கப்பட்டமையுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை என விசாரணைகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றுக்கு இன்று அறிவித்தார்.

இதேவேளை, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தேவாலயத்தின் மற்றுமொரு ஊழியரான பிரான்சிஸ் முனேதுன் என்பவர் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 28 ஆம் திகதி மன்றுக்கு அறிவிப்பதாகவும் சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்