எரிவாயுக் கசிவினால் கண்டியில் வர்த்தக நிலையம் தீக்கிரை

எரிவாயுக் கசிவினால் கண்டியில் வர்த்தக நிலையம் தீக்கிரை

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2022 | 6:14 pm

Colombo (News 1st) சமையல் எரிவாயுக் கசிவு காரணமாக கண்டி – வத்தேகம பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

வத்தேகம – மடவல பங்களாவத்தை பிரதேசத்திலுள்ள கடையொன்றிலேயே தீ பரவியுள்ளது. சமையல் எரிவாயு கசிவினால் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கம்பளை நகர் பகுதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயுக் கசிவு காரணமாக அடுப்பு வெடித்துள்ளது.

குறித்த எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்