by Staff Writer 01-02-2022 | 8:30 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் பருவகாலத்தில் சஞ்சரிக்கும் புலம்பெயர் பறவைகளை பார்வையிடுவதற்கான கோபுரம் இன்று திறந்து வைக்கப்பட்டது .
மன்னார் பிரதான பாலத்திற்கும் தள்ளாடி சந்திக்கும் இடையிலுள்ள வங்காலை பறவைகள் சரணாலயத்தின் அமைவிடத்தில் 35 அடி உயரத்தில் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (United Nations Development Programme ) நிதி பங்களிப்பின் கீழ் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்த வலசைப் பறவைகளை கண்டுகளிப்பதற்கான கோபுரம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் காட்சிக் கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்டான்லி டிமெல், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரொபர்ட் ஜுக்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.