தேங்காய்க்கு நிலையான விற்பனை விலை

தேங்காய்க்கு நிலையான விற்பனை விலை

by Staff Writer 01-02-2022 | 7:31 PM
Colombo (News 1st) இவ்வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலைக்கு தேங்காயை பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களூடான இந்த நிலையான விலையில் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார். நாட்டில் தேங்காய் விலை அதிகரித்து வருவதை அடுத்து, நுகர்வோர் நியாயமான விலையில் அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவகத்தினால் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை வலைப்பின்னலுடன் இது தொடர்பாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.