by Bella Dalima 01-02-2022 | 8:52 PM
Colombo (News 1st) அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் புதிய முடிச்சு ஒன்றை இடுவதற்கு தயாராகியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (01) தெரிவித்தார்.
நியூஸ்ஃபெஸ்டின் YouTube நிகழ்ச்சியான Ten questions நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு குறைந்தது இரண்டரை வருடங்கள் உள்ள நிலையில், அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு ஆட்சியை தக்கவைக்க முயல்வதாகவும் பெரும்பாலும் நாட்டில் அடுத்ததாக தேசிய தேர்தல் நடைபெறும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.